இடுகைகள்

இயற்கை - ,Nature

இயற்கையை அதன் போக்கில் விட்டு விடுங்கள் அதுவே தன்னை புதுப்பித்து கொள்ளும். நம் தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது சரியல்ல.  தற்போதைய மக்கள் நாம் வாழும் இந்த பூமியை வாழ தகுதியற்றதாக்கி விட்டு, அடுத்த கிரகத்தில் குடியேற தயாராகி கொண்டிருக்கிறார்கள்.  நாம் எந்த ஒரு கிரகத்தில் குடி அமர்ந்தாலும் அதை நாம் பாதுகாக்க வில்லை என்றால், இந்த நிலை தொடருமே தவிர தீர்வு கிடக்காது. ஒரு வீட்டில் எலி செத்ததால் துர்நாற்றம் வீசுகிறது என்றால் நாம் செய்ய வேண்டியது செத்த எலியை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர,  வீட்டை மாற்ற கூடாது.  நாம் வாழும் பூமியையும் சரி செய்ய வேண்டும். தவிர அதை கை விட கூடாது. நாம் வாழ  தன் மடி  கொடுத்த நம் பூமித்தாய்க்கு நம் காணிக்கையாக மரங்களை வளர்த்துக் கொடுப்போம்..  இனி வானியல் ஆராய்ச்சியை விடுத்து மன்னியல் ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.   நாம் வாழ பிறறை மட்டும் அல்ல இயற்கையையும் கெடுக்க கூடாது.

மனிதம்

படம்
மனிதன் என்ற சொல்லுக்கு மனித தன்மையை தன்னகத்தே வைத்திருப்பவன் என்று பொருள். மனித தன்மை என்பது தன்னை போல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.  பிற மனிதனின் துன்பமான சூழ்நிலைகளில்,  தன்னைப் பொருத்தி பார்க்க வேண்டும்.  குறிப்பாக சமூக அக்கறை  வேண்டும்.  உதாரணமாக விவேகானந்தர் சிக்காகோவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரையாற்றினாரே  அதற்கு என்ன அர்த்தம் . இந்த உலகம் நம் உலகம்  இதில் உள்ள யாவரும் உறவினர்கள் என்று சொன்னாரே அதைப் போல.  உங்கள் மனங்களுக்கும், நீங்கள் உங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்  மனிதத்தை கற்றுக் கொடுங்கள்.  இன்றும் இந்த உலகம் முழுவதும் அழியாமல் இருக்க காரணம் மனிதம் முழுவதும் அழியாமல் இருப்பதாலே தான்! அந்த மனித மனங்களுக்கு எனது நன்றிகள்! இனியாவது விதைப்போம் மனிதத்தை, அற்த்தை, மறத்தை ! Butterfly effects Follow You !