இயற்கை - ,Nature

இயற்கையை அதன் போக்கில் விட்டு விடுங்கள் அதுவே தன்னை புதுப்பித்து கொள்ளும். நம் தேவைகளுக்காக இயற்கையை அழிப்பது சரியல்ல. 

தற்போதைய மக்கள் நாம் வாழும் இந்த பூமியை வாழ தகுதியற்றதாக்கி விட்டு, அடுத்த கிரகத்தில் குடியேற தயாராகி கொண்டிருக்கிறார்கள். 

நாம் எந்த ஒரு கிரகத்தில் குடி அமர்ந்தாலும் அதை நாம் பாதுகாக்க வில்லை என்றால், இந்த நிலை தொடருமே தவிர தீர்வு கிடக்காது.

ஒரு வீட்டில் எலி செத்ததால் துர்நாற்றம் வீசுகிறது என்றால்
நாம் செய்ய வேண்டியது செத்த எலியை அப்புறப்படுத்த வேண்டுமே தவிர,  வீட்டை மாற்ற கூடாது. 

நாம் வாழும் பூமியையும் சரி செய்ய வேண்டும். தவிர அதை கை விட கூடாது. நாம் வாழ  தன் மடி  கொடுத்த நம் பூமித்தாய்க்கு நம் காணிக்கையாக மரங்களை வளர்த்துக் கொடுப்போம்.. 

இனி வானியல் ஆராய்ச்சியை விடுத்து மன்னியல் ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.  

நாம் வாழ பிறறை மட்டும் அல்ல இயற்கையையும் கெடுக்க கூடாது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனிதம்